தீவிர கண்காணிப்பில் நடராஜன்! சசிகலா சந்திப்பு எப்போது?

சென்னை:

றுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள  நடராஜன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக  குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நலமில்லாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள தனது கணவரை காண  பரோலில் வந்துள்ள சசிகலா, நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

அவர் உடனே கணவரை பார்க்க மருத்துவமனைக்கு பாசத்துடன்  ஓடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நேரடியாக தனது உறவினர் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்துக்கொண்டார்.

இன்று காலையாவது கணவரை கான ஆவலோடு மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் 11 மணிக்கு மேல்தான் கணவரை பார்க்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் கணவர் .நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம்- கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்த புதன்கிழமை (அக்.4) மேற்கொள்ளப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், குளோபல் மருத்துவமனை நடராஜனின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில்,   நடராஜன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கணவர்மீது சசிகலா கொண்டுள்ள பாசம் அவரது கட்சி தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Natarajan in serious surveillance! When will Sasikala meet?