பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

12ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, ஜெ.இ.இ., பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT), நீட் போன்ற தொழில்முறை படிப்புகளில் சேர தேர்ச்சி பெறும் மாணவர்கள் மற்றும் ஐஐடி, தேசிய சட்டப் பள்ளி, எய்ம்ஸ் மற்றும் எம்எம்சி போன்ற பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு முதல் ஆண்டுக்கான கல்விச் செலவை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்கும்.

மக்களைத் தேடி மேயர் என்ற புதிய முயற்சியை சென்னை மேயர் ஆர். பிரியா அறிவித்துள்ளார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை வடக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வருவாய் மாவட்ட (RDC) அலுவலகங்களில் சென்னை மேயர் ஒவ்வொரு மாதமும் கலந்துகொண்டு அந்தந்த வருவாய் மாவட்டத்தில் குடியிருப்போரின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.

பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவை அமைக்க முடிவு.

பொது-தனியார்-கூட்டாண்மை முறையில், 1,2,3,4,5,6,7,11,12,13,14,15 மண்டலங்களில் சாலையோர பார்க்கிங் அமைக்கப்படும்.

நகரின் முக்கிய பொது இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்ய GCC மற்றும் CMDA இணைந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.