“திரைப்படம் ரிலீஸ் ஆகும் பின்னே.. 100வது நாள் போஸ்டர் அடிக்கப்படும் முன்னே..” என்பது கோடம்பாக்க மொழி.

அது மட்டுமல்ல. படம் வெளியான மூன்றாவது நாளே… வரவு என்ன.. செலவு என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே வெற்றிவிழா கொண்டாடிவிடுவார்கள் இங்கு.

கடந்த வருடம் வெளியான 209 படங்களுக்கும் இப்படி வெற்றிவிழா நடந்ததாக நினைவு.

ஆனால் உண்மையிலேயே வசூலைக் குவித்த படங்கள் எவை?

கோடம்பாக்கம் ஏரியாவில் குறுக்கும் நெடுக்குமாய் புகுந்து புறப்பட்டு சேகரித்த வெற்றி லிஸ்ட் இதுதான்.

1. தெறி

2. கபாலி

3. பிச்சைக்காரன்

4. ரஜினி முருகன்

5. ரெமோ

6. 24

7. இருமுகன்

8. அரண்மனை-2

9. இறுதிச் சுற்று

10. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

11. தர்மதுரை

12. அப்பா

13. சென்னை-28-2

14. சேதுபதி

15. விசாரணை

16. கிடாரி

17. கொடி

18. காஷ்மோரா

19. தேவி

20. திருநாள்

21. தில்லுக்கு துட்டு