கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸன் மனைவி மரணம்!

Must read

சென்னை,

டிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி காலமானார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பெனியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான சந்திரஹாசன் மனைவி கீதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.  அவருக்கு வயது 73.

சந்திரஹாசன் – கீதாமணி தம்பதி

சந்திரஹாசன், கமல்ஹாஸ னுடைய இரண்டாவது அண்ணன்.  இவருடைய மனைவி கீதாமணி. உடல் நலக் குறைவு காரணமாக கீதாமணி சென்னை யில்  உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்றுஇரவு அவருக்கு  திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை  பலனின்றி கீதாமணி மரணம் அடைந்தார்.

அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.   திரையுலகினர்   அஞ்சலி செலுத்தி வருகிறார்னாகள்.

மரணம் அடைந்த கீதாமணிக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும், அனுஹாசன் என்ற மகளும் உள்ளனர்.

More articles

Latest article