டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று இரண்டாயிரத்தை கடந்துள்ளது.  தினசரி நேர்மறை விகிதம்  0.31 சதவீதத்தில் இருந்து 0.83 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக  2,067 பேர் கொரோனாவால்  பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,47,594 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மேலும் 40 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,22,006 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,547 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,13,248 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது/

தற்போது நாடு முழுவதும் 12,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  1,86,90,56,607 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,23,733 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.