சென்னை: வடமாநிலங்களில் கொரோனா பரவல்மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

டெல்லி உள்பட வடமாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பதை அடுத்த, மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு கொரோனா காணிப்பை பலப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து,  தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 109 பேருக்கு தொற்று உறுதியாகி யிருக்கிறது. அதேபோல் கோவையில் 18 பேருக்கும், செங்கல்பட்டில் 38 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் எழுதி உள்ள கடிதத்தில்,    இந்தியாவில் டெல்லி , உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூடும் இடங்களில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.