சென்னை: அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர், பயணத்தை வெற்றிகரமான முடித்த நிலையில், பிற்பகல் சென்னை திரும்பினார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முதன்முறையாக டெல்லி சென்று  பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

தொடர்ந்து  இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலை அவர்களது இல்லத்தில் சந்தித்தார் ஸ்டாலின். தனது அரசு முறை பயணத்தை முடித்த அவர், விமானம் மூலம் சென்னை திரும்பினார்.