சென்னை 

குதிநேர வேலை தேடுபவர்களிடம் பண மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சென்னை நகரில் ஒருவர், பகுதி நேர வேலை தொடர்பான விவகாரத்தில், ஒரு கும்பலிடம் 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்ததாக, காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த மோசடி தொடராக முகமது இலியாஸ், தமிழ்செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் உள்ள பெண்கள், வேலையில்லாமல் இருப்போரைக் குறிவைத்து, பகுதி நேர வேலை தொடர்பாக பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 செல்போன்கள், லேப்டாப் மற்றும் நிறுவன சீல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.  இந்த மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த 12 லட்ச ரூபாயும் முடக்கப்பட்டது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடி தொடர்பான புகார்களை, சைபர் கிரைம் இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் எனக் கூறி உள்ளார்