திருவனந்தபுரம்: 1998ம் ஆண்டு கோவையில் 46பேரை குண்டு வைத்து கொலை செய்த குற்றவாளியான  மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உடல்நலப்பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கொடூர குண்டுவெடிப்பில், 5 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர்  கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பை நடத்தியது, கேரளாவைச் சேர்ந்த  மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்த அக்கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மதனானி தலைமையிலான தீவிரவாதிகள்,  2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.  பல ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருந்து வந்த  நிபந்தனை ஜாமீனில்  சிறையில் இருந்து வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நல பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது ஜாமீனில் மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியது.

இதையடுத்து மதானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவுக்கு வந்தார். அவர் கல்லீரல் நோய் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது  உடல்நிலை கவலைக் கிடமான நிலையில் இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரக்கு  வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.