சென்னை:  தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ரூ.51 ஆயிரத்தை கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ. 51,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத் தின் விலை கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 க்கு விற்பனையாகிறது.

 

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும், சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,860 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,390 ஆகவும் விற்பனையாகிறது.

மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,860 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,390 ஆகவும் விற்பனையாகிறது.

திருச்சியில் (Gold Rate In Trichy ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,860 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,390 ஆகவும் விற்பனையாகிறது.

வேலூரில் (Gold Rate In Vellore) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,860 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,390 ஆகவும் விற்பனையாகிறது.

நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)

தலைநகர்  டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,746 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,185 ஆகவும் விற்பனையாகிறது.

மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.

கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.

ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.

குஜராத்  அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,736 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,175 ஆகவும் விற்பனையாகிறது.

திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.

பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.

ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,708 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,150 ஆகவும் விற்பனையாகிறது.

புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,731 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,170 ஆகவும் விற்பனையாகிறது.