அரியலூர்:
ரியலூரில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிவேக பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட்டே காரணமாகி உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக திகழ்ந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு விற்பனை செய்து வந்த வணிகர்கள்,  சிறுவியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.  அவர்களை ஊர் எல்லையில் மடக்கி கொரோனா தொற்று பரிசோதனைகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து அரியலூர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தியதில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே  34 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரேநாளில்  168 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது.  இதையடுத்து,  அரியலூர் மாவட்டதில் மொத்த கொரோனா பாதிப்பு 202 ஆக உயர்ந்துள்ளது. 
இது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.