சென்னை: கடலுக்குள் புதையுண்ட பூம்புகார் நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்பது ஆய்வுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை  பூம்புகார் நகரம் 2500 ஆண்டுகள் வயது உடையவை  என கூறி வந்த நிலையில், தற்போது, 15,000 வருடங்கள் பழமையானது என,  ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடல்கீழ் பூம்புகாா் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என பூம்புகாா் ஆய்வுத் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளா் சோம. ராமசாமி தெரிவித்தாா். இந்திய துணைக் கண்டத்தில் மேற்கு கடற்கரைப்பகுதியில் இருந்த துவாரகாவும், கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்த பூம்புகாரும் பண்டைய காலத்தில்மிகத் தலைசிறந்த நகரங்களாக இருந்துள்ளன.

இந்த பூம்புகார் நகரம் சோழ மன்னர்களால் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டு வருகிறது. எனினும், பூம்புகாரின் அழிவுபற்றி இதுவரை முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த சூழலில் பூம்புகார் குறித்து மத்திய அரசின்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதிஉதவியோடு பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தலைமையில் பல்துறை சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காவிரி வண்டல்பகுதிகள் இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலமும், கடல் கீழ் பகுதிகள் GEBCO (பல்துறை சார் கடல் கீழ்தரைமட்ட அளவு) மற்றும் MBES (ஒலிசார் கடல் கீழ் தரைமட்ட அளவீடு மூலமும் ஆராயப்பட்டன.

ஜெப்கோ மூலம் நடத்திய முதற்கட்ட ஆய்வுகளில் கடலுக்கு கீழே 40 கி.மீ தூரம்வரை 3 மிகப் பெரியடெல்டாக்களை காவிரி நதி உருவாக்கியிருப்பது தெரிய வந்தது. தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ளசுமார் 1000 சதுர கி.மீகளில் MBES சர்வே, தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது,  பூம்புகார் நகரம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடற்கரையில் இருந்து சுமார் 30 – 40 கி.மீ தூரத்தில்கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீபரப்பில் (தற்போதைய கோவை மாநகருக்கு இணையான அளவுடைய நகரம்) ஒருதுறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துறைமுக நகரம்சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. இந்நகரத்தில் ஒரு துறைமுகம். அதன்அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச்சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக்கொண்டகுடியிருப்புக்கள் மற்றும் கலங்கரை விளக்கமும் காணப்பட்டன. இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும், கிழக்கு-மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது.

இந்த துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்கள் நிறுத்துவதற்காக சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு கப்பல் துறைகள் காணப்படுகின்றன. அதன்படி,  பூம்புகார் நகர துறைமுகம், சிறந்த  துறைமுகமாக விளங்கி, கிழக்கே தொலைதூர தென் கிழக்கு ஆசியநாடுகளுடனும், மேற்கே எகிப்து வரையிலும் கடல் சார் வணிகத்தொடர்புகொண்டிருந்திருக்கிறது.

துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள் ஆகிய இரண்டுமே வடக்கு-தெற்காக காணப்படும் 40 கி.மீ. நீளமான மற்றும் 3-4 மீட்டர் உயரமான கடந்த கால பீச் மணல் மேடுகளுக்கு மேற்காக இருக்கின்றன. இதில் இருந்து துறைமுகத்தையும், கப்பல் தளங்களையும் அலைகளின் நேரடித்தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த இடத்தில் துறைமுகத்தையும் மற்றும் கப்பல் துறைகளையும் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இத்துறைமுகத்தைச்சுற்றி பல இடங்களில் குடியிருப்புக்கள் தென் படுகின்றன.

துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற பீச் மணல் மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் காணப்படுகின்றன. இதே போன்று துறைமுகத்திற்கு 10கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய, ஆனால் உள்ளே உள்ள கட்டிடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள் ஆகிய இரண்டுமே வடக்கு-தெற்காக காணப்படும் 40 கி.மீ. நீளமான மற்றும் 3-4 மீட்டர் உயரமான கடந்த கால பீச் மணல் மேடுகளுக்கு மேற்காக இருக்கின்றன. இதில் இருந்து துறைமுகத்தையும், கப்பல் தளங்களையும் அலைகளின் நேரடித்தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த இடத்தில் துறைமுகத்தையும் மற்றும் கப்பல் துறைகளையும் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இத்துறைமுகத்தைச்சுற்றி பல இடங்களில் குடியிருப்புக்கள் தென் படுகின்றன.

துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு உள்ளே உள்ள இந்த கலங்கரை விளக்கத்தை அடைவதற்காக கட்டிய பாலத்தின் அடியே யுள்ள தூண்களும், சுற்றுப்படிக்கட்டின் அடித் தூண்களும் தெளிவாக MBES படங்களிலே தென்படுகின்றன.

இந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பு எகிப்தில் உள்ள கிளியோபட்ரா கலங்கரை விளக்கம் போலவும், மற்றும் 1100 ஆண்டுகட்கு முன்பு பராந்தக சோழன் வேதாரண்ணியம் – கோடியக்கரையில் அமைத்த கலங்கரை விளக்கம் போலவும் தெரிகின்றது. ஆனால் இக்கலங்கரை விளக்கம் எல்லாவற்றிற்கும் காலத்தால் முந்தைய, சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானதாகும். ஆக, கடலுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூம்புகார் நகரம் சுமார் 15,000 ஆண்டுகட்கு முன்பு முதன்முதலாக அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் என்று தெரிகிறது.

இந்தஆய்வில் கண்டறிந்த உண்மைகள் பூம்புகார் 2500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்களுக்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இடத்தில்தான் முதன்முதலில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்தி யதுணைக்கண்டத்தில் மேற்கு கடற்கரைப்பகுதியில் இருந்த துவாரகாவும், கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்த பூம்புகாரும் பண்டைய காலத்தில்மிகத் தலைசிறந்த நகரங்களாக இருந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.