சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என அதிமுக கூட்டணி ஆதரவில் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பதவிக்காக பச்சோந்தியாக மாறுவதில் பாட்டாளி மக்கள் கட்சிதான் நம்பர் ஒன் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். கடந்த பாராளுமன்ற தேர்தல், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் பங்கேற்று சில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். பின்னர் ஆட்சி மாறியதும், எப்போதும்போல, அதிமுக கூட்டணிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது. சமீக காலமாக, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எப்போதும்போல மீண்டும் பச்சோந்தியாக மாறி, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு. பா.ம.க எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  மேலும்,   . எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என்று கூறியுள்ளார்.