சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 5 கல்லூரிகளைச் சேர்ந்த தற்காலிக பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வுக்கான  ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.