துரை

துரை மாவட்டத்தில் ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சியர் எஸ் நாகராஜன்

மதுரை மாவட்டத்தில் பல நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது.    இதற்கான நேர்காணல் சுமார் இரு வருடங்களுக்கு முன்பு முடிந்து விட்டன.    இந்த வேலை வாய்ப்புக்கு  ரூ.2 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது.   இந்த பணிக்கு விண்ணப்பித்த பலரும் ஏழை மக்கள் என்பதால் இந்த லஞ்சப் பணத்தை அளிக்க முடியாத நிலையில் இருந்துள்ள்னர்.

இந்நிலையில் மதுரை ஆட்சியர் எஸ் நாகராஜன் தலைமையில் ஒரு குழு இதை ஆராய்ந்தது.    நேர்காணல் முடிந்த பிறகும் அரசியல் தலையீடு காரணமாக பணி நியமன உத்தரவு வழங்கப்படாதது தெரிய வந்தது.  அதை ஒட்டி இந்த பட்டியலை ஆராய்ந்த போது இதில் பல பெயர்களுக்கு எதிரே அடையாளக் குறி இடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த அடையாளம் குறித்து மதுரையில் உள்ள 17 வட்டத்தின் குழந்தைகள் முன்னேற்ற திட்ட அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது.  அதற்கு சரியான விடை அறியாததால் அந்த திட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மூத்த அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் நாகராஜன் அமைத்தார்.  அந்த குழு தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இவ்வாறு கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 1500 உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.    இந்த உத்தரவுகள் குழந்தைகள் முன்னேற்ற திட்ட அதிகாரிகள் மூலம் அல்லாமல் நேரடியாக பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் வழங்கப்பட்டன.  இதற்காக திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சோதனை நடத்த உள்ளதாகவும்  அனைத்து பஞ்சாயத்து ரஜ் ஊழியர்களும் அலுவலகத்தில் இருந்தாக் வேண்டும் எனவும் உத்தரவிடப்படது.

அதன் பிறகு இரவோடு இரவாக இந்த உத்தரவுகள் பஞ்சாயத்து ராஜ் ஊழியர்கள் மூலம் பயனாளிகளுக்கு  அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  ஒரு சிலர் மகிழ்ச்சியாலும் நன்றியாலும் இந்த உத்தரவை வழங்கிய ஊழியர்கள் காலில் விழுந்து வணங்கி உள்ளனர்.

இந்த உத்தரவை வழங்கிய ஆட்சியர் எஸ் நாகராஜன் நேற்று மாலை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்