சிதம்பரம்

சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசம் உள்ளது.   இக்கு தேவாரம் இசைக்க வேண்டும் என வெகுநாட்களாக ஓதுவார்கள் முய்யறு வருகின்றனர்.   முன்னொரு காலத்தில் தேவார திருவாசக சுவடிகள் சிதம்பரம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வெளிக் கொணர்ந்தது ராஜராஜ சோழன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடத் தடை விதித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு அங்கு தேவாரம் இசைக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.   அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.  இந்த வழக்கு குறித்து அரசு சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

எனவே இன்று முதல் இன்னும் ஒரு மாத காலத்துக்கு யாரும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.  இதையொட்டி சிதம்ப்ரம் கோட்டாட்சியர் ரவி கோவில் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.