அமராவதி: ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நடிகை ரோஜா உள்பட 14 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றனர். அவர்களக்க மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் 25 பேர்கள் கொண்ட அமைச்சரவை ஆட்சி செய்து வந்தது. பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள அமைச்சர்களில் 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், புதிதாக 14 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர்.  புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.