டெல்லி: இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது தீவிர கவனம் செலுத்துகிறது மத்தியஅரசு. அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தரவுகளை சேகரித்து வருகிறது. அதற்காக பிரத்யேக தரவு தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் அவ்வப்போது எழும் சலசலப்பு மற்றும் மத்தியஅரசுக்கு எதிரான நடவடிக்கைள், சமூக ஊடங்களில் வதந்திகள் பரப்புதல் போன்றவைகள் தீவிரமான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நமது  மண்ணில் அதிக காலம் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்காணிக்கவும், எந்தெந்த நாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருக்கிறார்கள், அவர்கள் தங்கியிருக்கும் பகுதி எப்படி, அங்கு எந்த வகையான மக்கள் வசிக்கிகாறர்கள், வெளிநாட்டினர் எதற்காக அங்கு தங்கியுள்ளனர், அவர்களின் பணி என்ன? எங்கெங்கு செல்கிறார்கள், யாரை சந்திக்கிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணிக்கும் வகையில், அவர்கள் சம்பந்தப்பட்ட தரவுகளை சேமிக்கும் வகையிலும்  பிரத்யேக  தரவுத்தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுககளை சேர்ந்தவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதுடன், அந்நாடுகளில் உள்ள  விசா வசதி மையங்களில் பயோமெட்ரிக் சேகரிப்பை கடுமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.