சென்னை

சென்னை நகரில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

வரும் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேதான் அமைப்பு சார்பில் சென்னையில் 21-வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து 126 படங்கள் திரையிடப்படுகின்றன.

விழாவில் விருது வென்ற வெளிநாட்டுப் படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ நாட் எஸ்பெக்ட் டூ மச் பிரம் தி யேண்டு ஆப் தி வேல்ட், பாலன் லீப்ஸ், ஸ்வீட் டீர்ம்ஸ், மெலடி உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

தவிர 19 இந்திய மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன. மாமன்னன், போர் தொழில், ராவணக் கோட்டம், சாயாவனம், ஸ்டார்ட் கேமரா ஆக் ஷன், செம்பி, உடன்பால், விடுதலை 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய 12 தமிழ் படங்களும் போட்டி பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளன.

திரைப்படங்கள் பி.வி.ஆர்., ஐநாக்ஸ் சினிமாஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்கங்களில் திரையிடப்படுகின்றன.

இந்த சர்வதேச திரைப்பட தொடக்க விழா 14-ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற ‘அனாடமி ஆப் எ பால்’ படம் தொடக்க நாள் அன்று திரையிடப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.