மேஷம்

பூர்வீக சொத்து விற்பனைல லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். எதையும் சாதிப்பீங்க. மனசுல நெனைச்ச விஷயமெல்லாம் நிறைவேறும், திருமணம் மாதிரியான சுப விஷயம்  நடைபெறும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கறவங்க வீட்ல தொட்டில்கள் ஆடும். புதிய பிசினஸ் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் ரெண்டு பங்கு லாபம் கெடைச்சாலும் வியப்பில்லை. பங்குச்சந்தை முதலீடுகள், லாட்டரியில ஜாக்பாட் கிடைக்கும்.  சோதனைங்களை சாதனைங்களாக மாத்தப்போறீங்க. வயசானவங்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்து செலவுகள் முடிவுக்கு வரப்போகிறது.தொட்டதெல்லாம் பொன்னாகும்.

ரிஷபம்

திடீர் ஜாக்பாட் வந்து திக்குமுக்காட வைக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வாகன பயணங்களில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீங்க. மொத்தத்தில நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய வாரம் இது. வீடு மாறும் யோகம் உள்ளது. சொந்த வீடு கட்டும் யோகம் கைகூடி வருங்க. வசதியான வீட்டிற்கு இடம் மாறப்போகிறீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் வரவும் சான்ஸ் வரலாம். வெளிநாடுகளில் வசிக்கறவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டுல சுப காரியம் நடைபெறப்போகிறது. பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடைபெறப்போகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. உங்க பாஸ் ஒங்களைக்கூப்பிட்டுப் பாராட்டுவாரு. மனசெல்லாம் மத்தாப்பூ. பலநாள் இருந்துக்கிட்டிருந்த தடைகளும் தாமதங்களும் விலகும்.

மிதுனம்

உங்களுக்கு திருமணம் சுபகாரியம் நடைபெறும். உங்களுடைய வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையும் நிதானமும் தேவை. யாரை நம்பியும் பணம் கடனாக தராதீங்க. ஒங்களோட குடும்பத்தை மட்டும் பாருங்கள். ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை தராதீங்க. சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக பேசுங்கள். கவனமா இருக்க வேண்டிய வாரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் வேணுங்க. நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். தசாபுத்தி நல்லா இருக்கற பட்சத்துல உங்க பொருளாதார நிலைமை, பண வருமானம் நல்லாவே இருக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். எதிர்ப்புகள் விலகி ஓடும். புகழும் செல்வமும் செல்வாக்கும் கூடி வரப்போகுது.

கடகம்

குடும்பம் குதூகலம் அடையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில்ல லாபம் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். அதுக்கேத்த வருமானமும் வரும். சின்ன பிராப்ளம்ஸ் எது வந்தாலும் எதையும் தைரியமாக சமாளிப்பீங்க. ஒங்க உழைப்பும் முயற்சியும் ஒங்களுக்கு நல்லாவே லாபம் தரும் உங்களின் அந்தஸ்து உயரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. நல்ல வேலையை தரப்போகிறார். . எதையும் எதிர்கொள்வீங்க. எதிரிகள் தொல்லை ஒழியும். பண வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்காதீங்க. ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீங்க.  மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த வாரமா அமையப்போகுது.

சிம்மம்

வீட்டுல மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீட்டிற்கு இடம் மாறுவீங்க. சிலருக்கு வேலையில் இட மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் பண இழப்பை சரி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீங்க. பொருளாதார நிலை சீரடையும். உங்களின் தன்னம்பிக்கை, உங்க மனசுல அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீங்க. குருவின் பார்வை கேதுவிற்கு கிடைக்கப்போகிறது. குரு பகவான் பார்வையும் ஒங்களோட ராசிக்கு கிடைக்கப்போவதால் 2024 ஆம் ஆண்டில் அள்ளிக்கொடுக்கப் போகிறார் ராகு பகவான். காதலால் கசிந்து உருகுவீங்க. அபரிமிதான பண வரவு கிடைக்கும்.

கன்னி

நீங்கள் நெனைச்ச காரியம்.  செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்துல திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீங்க. யோகங்கள் கிடைக்கப்போகிறது. பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். வாக்கு கொடுக்காதீங்க, நிறைவேத்தறது அத்தனை சுலபமில்லை. உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

துலாம்

அரசு வேலையில உள்ளவங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். லேடீஸ்க்குக் குடும்பத்துல மதிப்பு மரியாதை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பண விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் சுலபமாகச் சரியாயிடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு பகவானை பார்வையிடப்போகும் கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார். பிசினஸ்ல லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சிலர் புதிய வீட்டிற்கு இடம் மாறுவீங்க. சிலருக்கு வேலையில் இட மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் பண இழப்பை சரி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீங்க. பொருளாதார நிலை சீரடையும். ஒங்களோட மனசுல அசாத்தியமான தைரியமி ஏற்படும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினைத் தயக்கமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீங்க. காதலால் கசிந்து உருகுவீங்க. எதிர்பார்த்ததைவிட அதிகமான பண வரவு கிடைக்கும். செய்யும் பிசினஸ் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்துல திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீங்க. வீடு வாகனங்கள் வாங்குவதில் சிறு தடைகள் வந்தாலும் பிறகு நிறைவேறிடும்.

தனுசு

உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மம்டுமில்லீங்க.. மன உளைச்சல்களும் முடிவுக்கு வந்து நிம்மதியை வழங்கும்.  உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடா இருங்க. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். இட்ஸ் ஓகே. சமாளிச்சுடுவீங்க. கடன் குடுக்கறதுக்கு முன்னாடி ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அரசு வேலையில் இருக்கறவங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்துல மதிப்பு மரியாதை கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அன்றைக்கே நீங்கி ரெண்டு பேருக்கும் நிம்மதி ஏற்படும். சகோதர சகோதரிங்ககூட லடாய் வேணாம். சமாதானமாப் போயிடுங்க. குழந்தைங்களால ஹாப்பினஸ் உண்டாகும். ஜாலியா ஊர் சுத்துவீங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாயிருங்க

மகரம்

பேச்சில் கவனமாயிருங்க. சும்மா ஹலோ சொன்னால்கூட உங்களைப் பார்த்துக் கோபமா ரியாக்ட் செய்யறதுக்கு யாரேனும் காத்திருப்பாங்க. நமக்கேன் வம்புன்னு போயிடுங்க. எஸ்பெஷலி யாரையும் சாபம் விட வேணாம். பலிச்சு வைச்சுதுன்னா மத்தவங்களுக்கும் கஷ்டம் ஒங்களோட மனச்சாட்சிக்கும் சிரமம். எதிரிங்க காணாமல் போவாங்க. புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏற்படுத்துவார். பிசினஸ்ல லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்க ஃபேமிலில உள்ளவங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சின்னச் சின்ன சிரமங்களைச் சந்திச்சாலும் நல்லபடியா நிறைவேற்றிடுவீங்க. டோன்ட் ஒர்ரி

சந்திராஷ்டமம்: டிசம்பர் 3 முதல் டிசம்பர் 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாயிருங்க

கும்பம்

நிலம் வீடு ஏதாவது வாங்கத் திட்டமிட்டிருந்தா இந்த வாரம் முயற்சி செய்ய ஆரம்பிச்சுக் கூடிய சீக்கிரம் வாங்குவீங்க. உங்க மகன்  அல்லது மகள் செயல்பாடுகளால் நிம்மதி பிளஸ் சந்தோஷம் பிளஸ் பெருமிதம் உண்டாகும். ஹாப்பியான அலைச்சல் உண்டு. இத்தனைகாலம் இதுக்குத்தானா பாடுபட்டோம்..னு ஒரு சின்ன சலிப்பு மனசுல ஏற்படும். டியர் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பகிர்ந்துப்பீங்க. நீங்க மதிக்கற பெரியவங்களைத் தயக்கமில்லாமல் அணுகுங்க. நல்லவங்களைக் கோட்டைவிட வேணாம். இறுகப்பற்றுங்க. பழைய நட்புகளை மீட் பண்ண சான்ஸ் ஏற்பட்டால் அந்த வாய்ப்பை நழுவவிட வேணாம். இன்ஃபாக்ட்.. நீங்களேகூட வாய்ப்பு ஏற்படுத்திக்கலாம். நத்திங் ராங். நிறைய உழைப்பீங்க. அதுக்கேற்ற பாராட்டு இல்லைன்னு ஒடனே முகத்தை உம்முன்னு தூக்கி வெச்சுக்காதீங்க. கடமையை நீங்க பாட்டுக்குச் செய்துக்கிட்டே போனால் பலன் அதுபாட்டுக்கு அப்புறமாய் வரும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாயிருங்க

மீனம்

இப்போ தேவையெல்லாம் ஒரு அம்பது கிராம் பொறுமைதாங்க. குடும்பப் பிரச்னைங்களைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லதுங்க. மகளுக்கோ, மகனுக்கோ மேரேஜ் செய்ய வேளை வந்தாச்சு. அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படாது. பிகாஸ் அதற்கான பலன்கள் ஹாப்பியா… சூப்பரா இருக்கும். எதுலயும் நிதானம் தேவை. வீட்டுல ஸ்வீட்டான சம்பவங்கள் நடைபெறும். திடீர்ப் பயணத் திட்டத்துல சில சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும். மத்தவங்களோட விமர்சனங்களப் பத்தி நீங்க எதுக்குக் கவலைப் படறீங்க. உத்தியோகத்துல உள்ள சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைகளில் சேர முயற்சிப்பீங்க. எதுவுமே கொஞ்சம் தாமதமாய்த்தான் நிறைவேறும். குடும்பத்துல உள்ளவங்க பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையைச் சரிவர செய்தாகணும்… தட்டிக் கழிக்கப் பாக்காதீங்க. தங்களோட முயற்சி வெற்றியடைறதால குழந்தைங்க ஹாப்பியா ஆயிடுவாங்க.