திஸ்புர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் பாஜக மாநில அரசுக்கு எதிராக  பாஜகவைச் சேர்ந்த  12 எம்எல்ஏக்கள்  ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் பாஜக தலைமை  அதிர்ச்சி அடைந்துள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக பரவி வருகிறது. குறிப்பாக அசாம், திரிபுரா போன்ற மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

அசாமில் பாஜக மாநில அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக, சோனோவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்து உள்ளனர். போராட்டத்தின்போது, முதல்வர் சோனோவால் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பிரசாந்த் ஆகியோரது வீட்டின் மீது  கல்வீச்சும் நடைபெற்றது.  மேலும், 12 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள 12 பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களும்,   அசாம் மாநில மக்களின் போராட்டம் நியாயமானதுதான். அவர்களின் கலாச்சார, பண்பாடு மற்றும் அவர்களின் நலன் மிகவும் முக்கியமானதாகும் எனக் கூறி  உள்ளனர். “குடியுரிமை சட்டத்திருத்தம் பா.ஜ.க.,வின் கொள்கையாக இருக்கலாம் ஆனால் அசாம் மாநில மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்து உள்ளனர். இது அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.