டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில்  சர்வதேச பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரும் ஒமிக்ரான் துணை வகைகள் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சீனா உள்பட சில உலக நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா மாறுபாடு வைரசால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை கொரோனா தற்போது வேகம் காட்ட தொடங்க உள்ளது. ஆனால், அங்குள்ள  உண்மை நிலவரத்தை சீனா தெரிவிக்க மறுத்து வருகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 இறுதியில், இந்தியாவிலும் தொற்று பரவலை தடுக்க மீண்டும் சில கட்டுப்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சீனா, ஜப்பான் ,தைவான் ,தென்கொரியா உள்பட 6 நாடுகளில் இருந்து  இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 11 பேருக்கு ஒமிக்ரான் மாறுபா டான  XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 டிசம்பர் 23 முதல் ஜனவரி 3 வரை  பிற நாடுகளில்   5228க்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து  இருந்து இந்தியாவுக்கு 19,227 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளத.  அவர்களில் 124 நபர்கள் கோவிட் பாசிட்டிவ் சோதனை செய்துள்ளனர் மற்றும் அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,” இதில் 11 பயணிகளுக்கு ஒமிக்ரான் மாறுபாடான  XBB வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்திய மக்களிடையே ஓமிக்ரான் மிகவும் லேசானது என்று நிரூபிக்கப்பட்டதால், அதன் துணை வகைகளும் ஒத்ததாக இருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஓமிக்ரானைத் தவிர வேறு எந்த புதிய மாறுபாட்டையும் கண்காணிப்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும்,  நேர்மறை மாதிரிகளின் மரபணு வரிசைமுறை XBB ஐ 14 நிகழ்வுகளுடன் மிக முக்கியமான ஓமிக்ரான் துணை மாறுபாடாக வெளிப்படுத்தி வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவத்து உள்ளனர்.