மும்பை: மராட்டியத்தில், மொத்தம் 11 மருத்துவர்களின் எண்களைக் கொண்ட ஒரு டாஸ்க்ஃபோர்ஸ் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டே, இந்த உதவி மையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இந்த மருத்துவர்களின் மொபைல் எண்களில், எந்த ஒரு எண்ணிற்கு அழைத்தாலும் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பினாலோ, கொரோனா மற்றும் தேவைப்படும் விரிவான மருத்துவ ஆலோசனைகளை விரைவாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 மருத்துவர்கள், மும்பையின் புகழ்பெற்ற மருத்துவர்கள். இவர்களின் தொடர்பு எண்கள், மருத்துவ மற்றும் நிர்வாக அமைப்புகளில் பகிரப்பட்டுள்ளது. இவர்களை, மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவே கவனம் எடுத்து தேர்வு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கொரோனாவின் பிடியில் மராட்டியம் சிக்கித் தவித்துவரும் நிலையில், இந்த மருத்துவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டுழைப்பானது, நிலைமையை சமாளிக்க சிறப்பாக உதவியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.