சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று மட்டும்  தமிழகத்தில் மேலும் 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 25,79,130 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதுபோல இதுவரை 34,367 பேர் உயிர் இழந்துள்ளனர்.  25,24,400  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு  5,40,063 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல மொத்த உயிரிழப்பும் 8,342 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை  5,29,716 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

10.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 33,77,193 பேருக்கும், 10.08.2021 அன்று 16,273 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்தியஅரசு வெளியிட்டுள்ள தகவலில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 37 மாவட்டங்கள் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  சென்னை கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் படிப்படியாக மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தற்பொது கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதைப் போன்று 3வது அலை பரவத் தொடங்கி உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று பரவல் அதிகரித்துவரும் 37 மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து கொரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: