10 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகத்தில் இடஒதுக்கீடு 79% ஆக உயருமா?

Must read

டில்லி:

த்திய அமைச்சரவை இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பபட்டு வரும் நிலையில், அது 79% ஆக உயருமா என கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு தர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்புபடி 50 சதவிகிதம் வரை மட்டுமே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். ஆனால், இன்று மத்தியஅரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இடஒதுக்கீடு 60 சதவிகிதமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான  அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு  நிறை வேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப் பட்டு வருகிறது. தற்போது 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கும் வழங்கினால், இடஒதுக்கீடு 79 சதவிகிதமாக  உயரும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) சேருவதற்காக வருமான உச்ச வரம்பை  ரூ. 8 லட்சமாக உயர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு அதிகமாக இருந்தால்,  அவர்கள் கிரிமீலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட நிபுணர்கள், இதற்காக அரசியலமைப்பு சட்ட திருத்தம் தேவை யில்லை என்றும், அதற்கு பதிலாக தனி இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது என்று கூறி உள்ளனர்.

மேலும் இதுகுறித்த, அட்டவணை 9-ல் சேர்த்துவிட்டால் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

அதன்படி,  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுக்கான அளவுகோல்களாக குறிப்பிட்டுள்ளதாவது,

1) ஆண்டு வருமானம் 8 லட்சம்

2) 5 ஹெக்டேருக்கு கீழே உள்ள விவசாய நிலம்

3) 1000 சதுர அடி கீழே குடியிருப்பு

4) அறிவிக்கப்பட்ட நகராட்சி பகுதியில் 109 யார்டுக்கும் குறைவான அளவில் வீடு

5) அறிவிக்கப்படாத முனிசிபல் பகுதியில் 209 யார்டுகளுக்கு கீழே உள்ள குடியிருப்பு

ஏற்கனவே அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் எந்த ஒரு சட்ட திருத்தத்திலும் நீதிமன்றம்  நீதிமன்றம் தலையிடவோ, மறு ஆய்வோ செய்ய முடியாது என்ற நிலை இருந்து வருகிறது.

ஆனால் 9வது அட்டவணையில் 1973ம் ஆண்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட அனைத்துசட்டங்கள், சட்ட திருத்தங்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடிவும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.  9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் அதுகுறித்து ஆய்வு செய்யும் என்றும் கடந்த ஆண்டு ஒரு வழக்கில் உச்சநீதி மன்றம்  தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போதைய 10 சதவிகித இடஒதுக்கீடு 9வதுஅட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

More articles

Latest article