சென்னை

மிழகத்தில் இன்று 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,48,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 31,196 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,82,33,754 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் டில்லியில் இருந்து வந்துள்ளார். இதுவரை 35,48,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,691 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,97,770 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

இன்று 403 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,848 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 138 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 15 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.