அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இருமுறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட பைடனுக்கு ஜூலை 21 ம் தேதி முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த பைடன் ஜூலை 30 ம் தேதி ஆன்டிஜென் பரிசோதனை மூலம் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், புதனன்று காலை வழக்கமாக பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு மூன்றாவது முறையாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான இருமல் மட்டும் இருப்பதாகவும், காய்ச்சல் ஏதுமில்லை என்றும் அவரது மருத்துவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பைடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் மையப் பகுதியில் உள்ள எஸ்சிகியூடிவ் ரெசிடென்ஸ் எனும் அதிபரின் பிரத்யேக அதிநவீன குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.