சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில், 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 42 வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 97 என தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இறந்தவர்களில், 74 பேர் அரசு மருத்துவமனையிலும், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையிலிருந்தவர்கள். அதிகபட்சமாக, தஞ்சையில் 30 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818 என்றாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 4,952 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,707 என்றாகியுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா  தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட முதல் 5 மாவட்டங்களாக இருப்பவை: கோவை (486 பேர்), ஈரோடு (395 பேர்), சேலம் (268 பேர்), திருப்பூர் (243), தஞ்சாவூர் (239). இவற்றுக்கு அடுத்த இடத்தில், சென்னை உள்ளது.

சென்னையில் 238 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர், சிவகங்கை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று சற்றே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 51 பேர் அதிகரித்து இன்றைய எண்ணிக்கை 248 ஆக உயர்ந்திருக்கிறது. மதுரையில் நேற்று 68 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டிருந்தனர். இன்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 94. காஞ்சிபுரத்தில் 68 ஆக இருந்தது இன்று 71 ஆக உயர்ந்திருக்கிறது, கரூரில் 32 ஆக இருந்தது இன்று 46 ஆக உயர்ந்திருக்கிறது. விழுப்புரத்தில் இன்றும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. அதுபோலவே கள்ளக்குறிச்சியிலும் புதிய தொற்றின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,32,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, இதுவரை 8,196 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 446 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,22,083 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

02.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,11,414 பேருக்கும், 02.07.2021 அன்று 29,613 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: