சென்னை

ராமரிப்பு பணி காரணமாக பல ரயில்கள் ர்த்து செய்யப்பட்டுள்ளன.

குண்டூர் மற்றும் சென்னை செண்டிரல் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.  இதைப் போல் சென்னை கடற்கரை மற்றும் விழுப்புரம் இடையேயும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதையொட்டி இந்த இரு மார்க்கங்களிலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே இது குறித்து,

சென்னை சென்ட்ரல் – குண்டூர் மற்றும் சென்னை கடற்கரை – விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி நெல்லூர் – சூலூர் பேட்டை (06745, 06746), சூலூர் பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் (06741, 06742), ஆவடி – மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் (66000) மற்றும் (66003) ஆகிய புறநகர் மின்சார ரயில்கள் வருகிற 22ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 அதேபோல் காரைக்குடி – சென்னை எழும்பூர் (12606) இடையே காரைக்குடியில் இருந்து வருகிற 16ம் தேதி (நாளை) காலை 5.05 மணிக்கு புறப்படும்  பல்லவன் அதிவிரைவு ரயிலானது செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும். அதேபோல் சென்னை எழும்பூர் – மதுரை (12635) வைகை அதிவிரைவு ரயிலானது, வருகிற 16ம் தேதி (நாளை)  செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும்.

அதேபோல் விஜயவாடா – சென்னை சென்ட்ரல் (12711, 12712) பினாகினி அதிவிரைவு ரயிலானது, வருகிற 22ம் தேதி குண்டூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  மேலும் சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி  (22158) அதிவிரைவு ரயிலானது வருகிற 27ம் தேதி தாம்பரம்,செங்கல்பட்டு, அரக்கோணம் வடக்கு வழியாக மும்பை செல்லும்.”

என அறிவித்துள்ளது.