1
“நீ என்னை லவ் பண்றியா..”
 
“இல்லே.. நான் உன்னை லவ் பண்ணலே..”
 
“அப்பாடா.. தப்பிச்சேன்…”
 
– ஒரு சிறுமியும் சிறுவனும் இப்படிப் பேசினால் நமக்கு என்ன தோன்றும்.. தலையில் ரெண்டு கொட்டு வைக்கலாம் என்றுதானே நினைப்போம்.
 
சிறுவர்கள் விரும்பிப் பார்க்கும் சுட்டி டிவியில்தான் இந்த மாதிரி வசனங்கள் வருகின்றன.
 
அது மட்டுமல்ல.. கிட்டதட்ட எல்லா தொடர்களிலும், திரைப்பட வசனங்கள், நடிகர்களின் குரல் போல மிமிக்ரி செய்து வருகிறது.
 
அதே போல பாதிக்கு மேல் ஆங்கில வசனங்கள்தான்.
 
இது எல்லாமே சிறுவர்களை சீரழிக்கும் செயல் இல்லையா?
 
சுட்டி டிவி நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது நமது வீட்டில் சுட்டி டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
 
இல்லாவிட்டால் குழந்தைகள் சீரழிவது உறுதி!
 
யாழினி