சென்னை: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது  டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு, வாரிசு படங்கள் ரிலிசான நிலையில், அஜித் ரசிகர் பரத்குமார்  ஆர்வம் மிகுதியால் அந்த பகுதியில் மெவாக வந்துகொண்டிருந்த லாரியில் ஏறி நடமாடியதுடன், கீழே குழித்தபோது முதுகுதண்டு உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர பாபு, சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.

இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால், கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என அறிவுரை கூறினார்.