சென்னை: போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7கோடியே 1இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழாண்டு அரசு அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  2022-ஆம் ஆண்டில் 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ.625 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

151 நாட்கள் முதல் 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதுபோன்று 91 முதல் 151 நாட்கள் வரை பணிக்கு வந்த ஊழியர்களுக்கு தலா ரூ.85 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.