நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது.

திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.