சென்னை: நீயும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவன்தானே என உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு  டிடிவி தினகரன் கடும் கண்டனம்  தெரிவித்து உள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்துக்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, முதல்வர் எடப்பாடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது,  “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுவதராகவும், எடப்பாடி டெட்பாடி என்றும்,  சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு என்றதுடன், நாகூசும் வார்த்தையையும் உதிர்த்தார். 36 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

உதயநிதியின் பேச்சுக்கு அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சிரித்தனர். ஆனால், இந்த வீடியோவை காணும் பெண்கள், உதயிநிதியின் தரம்தாழ்ந்த விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமுமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன், உதயநிதிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது,

பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி 

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி.

பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா . எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது. உதயநிதி சொன்னது நகைச்சுவை அல்ல. பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் தெளிவாகக் கூறிய மோசமான வார்த்தைகள் அவை. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக திமுகவால் எதையாவது பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகை கஸ்தூரி, எப்போதும் அதே நினைப்புதான் போல என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபோலவே உதயநிதிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

உயதநிதி ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு! மக்களை ஈர்க்கும் பேச்சு வேண்டுமெனில் தாத்தாவின் புத்தகங்களும் சமூக நீதி கருத்து பிரச்சாங்களையும் வாசித்து கேட்டு அறிவார்ந்த கருத்துக்களை நுட்பமாய் ஆராய்ந்து கொள்கைகளை பரப்பினால் உங்களுக்கோர் இடம் தமிழ் சமூகத்தில் நிச்சயம் உண்டு இல்லையேல் தமிழ் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுவீர்கள் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் ஒரு பெண் பதிவிட்டுள்ளதில், உதயநிதியின் பேச்சு   “அருவறுப்பானது. இதுபோன்ற பேச்சை நாங்கள் கேட்க விரும்பவில்லை. இதுக்கு மேல ஒரு அசிங்கம் உண்டா?” என உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். சமூக வலைதளவாசிகள் உதயநிதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.