நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் ‘கூர்க்கா’ திரைப்படத்ம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவான படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றள்ளது .இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் , இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.