கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், நெப்போலியன் , ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.

இப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் நெப்போலியன்

”நான் வாழ்வில் ஆசைப்பட்ட அனைத்தும் இதுவரை நடந்திருக்கிறது. வில்லனாக அறிமுகமான நான் ஹிரோவானேன். அரசியலில் நுழைந்து எம்.பி., ஆனேன். அமெரிக்கா போக ஆசைப்பட்டேன். இன்று அங்கேயே செட்டில் ஆகி விட்டேன். இப்போது ஒரு அமெரிக்க திரைப்படத்தில் முழுமையான ஹீரோ பாத்திரம் ஏற்றுள்ளேன்” என்றார்.