டில்லி

ந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,16,54,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,786 அதிகரித்து மொத்தம் 3,16,54,584 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 542 அதிகரித்து மொத்தம் 4,25,384 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,304பேர் குணமாகி  இதுவரை 3,08,12,873 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,04,584 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,959 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,03,715 ஆகி உள்ளது  நேற்று 225 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,32,791 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,467 பேர் குணமடைந்து மொத்தம் 60,90,786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 76,755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 20,624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,90,761 ஆகி உள்ளது.  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,782 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,865 பேர் குணமடைந்து மொத்தம் 32,08,969 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,64,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,987பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,05,124 ஆகி உள்ளது  இதில் நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,542 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,632 பேர் குணமடைந்து மொத்தம் 28,44,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,69,806 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,076 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,178 பேர் குணமடைந்து மொத்தம் 25,04,805 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,058 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,66,175 ஆகி உள்ளது.  நேற்று 23 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,377 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,053 பேர் குணமடைந்து மொத்தம் 19,31,618 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.