கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.06 லட்சம் பேர் பாதிப்பு – 14.74 லட்சம் சோதனை

Must read

டில்லி

ந்தியாவில் 14,74,753 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,06,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,604 பேர் அதிகரித்து மொத்தம் 3,95,43,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 439 அதிகரித்து மொத்தம் 4,89,848 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2,43,495 பேர் குணமடைந்து இதுவரை 3,68,04,145 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 22,49,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9892 ஆகி உள்ளது.

நேற்று இந்தியாவில் 27,56,364 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 162,26,07,516 ஆகி உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவுவதால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,74,753 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 71,69,95,753 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,57,732 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,06,03,494 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article