கொல்கத்தா:

தொழிலதிபர் யசோவர்தன் பிர்லாவுக்குச் சொந்தமான யஷ் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா சூர்யா நிறுவனம் ரூ.67 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கொல்கத்தா யுகோ வங்கி அறிவித்துள்ளது.

யுகோ வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு கமர்ஷியல் வங்கியாக மாற்றப்பட்டது. இந்த வங்கி யானது  ராமேஸ்வர் தாஸ் பிர்லாவின் சகோதரர் ஜி.டி. பிர்லா என்பவரால் நிறுவப்பட்டது, அவர் யஷ் பிர்லாவின்  முன்னோர்.. யாஷ் பிர்லாவின் பெற்றோர்கள் விமான விபத்தில் ஏற்கனவே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யஷ் பிர்லா வாங்கிய ரூ.67 கோடி கடன் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து யாஷ் பிர்லாவின் நிறுவனத்துக்கு பல முறை  நோட்டீஸ் அனுப்பியும் பதில் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் யுகோ வங்கியின் தலைமை, வங்கியை நிறுவியவரின் உறவினரான யஷ் பிர்லாவை கடனை செலுத்த ‘வேண்டுமென்றே தவறியவர்’  என்று அறிவித்து உள்ளது.

கடன் வழங்கிய நிறுவனம், கடன் வாங்கிய நிறுவனத்தை  வேண்டுமென்றே ( ‘wilful defaulter’) பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக அறிவித்துவிட்டால், அந்த நபரின் தற்போதைய தொழிலுக்கு மட்டுமின்றி அவர் சம்பந்தப்பட்ட எந்த தொழிலுக்கும் கடன் கிடைக்காது.