தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’.

வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தாயரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார், யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யஃக்னமூர்த்தி.

நானே வருவேன் படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா முதலில் ஒப்பந்தமான நிலையில், அவருக்கு பதில் யாமினி யஃக்னமூர்த்தி ஒளிப்பதிவாளராக தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து யாமினி-யும் விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஒளிப்பதிவாளரான யாமினி யஃக்னமூர்த்தி “தவிர்க்க முடியாத காரணங்களால் நானே வருவேன் படத்தில் இருந்து விலக தீர்மானித்திருக்கிறேன். இந்தப் படக்குழுவுடனும் இயக்குனர் செல்வராகவனுடனும் பணிபுரிந்து ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.