அட்லீ இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிக்கும் படம் ‘பிகில்’. இந்தப் படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா என பலர் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பின் படத்தின் விநியோக உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு உரிமையை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியது.

ஸ்கிரீன் சீன் நிறுவனம், ‘பிகில்’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில், “ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் படத்தின் தமிழக விநியோக உரிமைகளை வாங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மகிழ்ச்சி கொள்கிறது. அவர்களுடன் நீண்ட, வெற்றிகரமான கூட்டினை எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.