டில்லி

ந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.    நீட் தேர்வு பயத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது இந்த எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.  இந்நிலையில் இந்த வருடத்துக்கான நீட் தேர்வு இந்த மாதம் அதாவது செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்தது.

இந்த நீட் தேர்வு குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.   குறிப்பாகப் பல நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கேள்வி தாள் லீக் ஆனதாகப் புகார்கள் எழுந்தன.   இந்த முறைகேட்டுடன் வேறு பல ஆள்மாறாட்டம் போன்றவையும் நடந்து சிலர் பிடிபட்டுள்ளனர்.  குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேச நீட் தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன

எனவே இம்முறை நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “நாட்டில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கேள்வித் தாள் லீக் ஆகி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், உ பி மாநிலங்களின் நீட் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் அதிக அளவில் நடந்துள்ளன.  எனவே செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.