டில்லி

நாடெங்கும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கண்ட்வா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் இமாசல  பிரதேசத்தில் உள்ள மாண்டி ஆகிய 3 மக்களவை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.  அத்துடன் 30 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக உள்ளன.  அவை ஆந்திராவில் 1, அசாம் 5, பீகார் 2, அரியானா 1, இமாச்சலப் பிரதேசம் 3, கர்நாடகா 2, மத்தியப் பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 3, மிசோரம் 1, நாகாலாந்து 1, ராஜஸ்தான் 2, தெலங்கானா 1 மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகும்.

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “தற்போதுள்ள கொரோனா தொற்று, வெள்ளம், பண்டிகை, குளிரான சூழ்நிலைகள் என பல்வேறு காரணங்களை ஆராய்ந்தும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.  நவம்பர் 2ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன   அவை இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி, ம.பி. உள்ள கண்ட்வா மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய 3 மக்களவை தொகுதி மற்றும் ஆந்திராவில் 1, அசாம் 5, பீகார் 2, அரியானா 1, இமாச்சலப் பிரதேசம் 3, கர்நாடகா 2, மத்தியப் பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 3, மிசோரம் 1, நாகாலாந்து 1, ராஜஸ்தான் 2, தெலங்கானா 1 மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.