லாஸ் ஏஞ்சல்ஸ்:

ஆஸ்கர் விருதை வென்ற ‘பிரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்திற்கு காரணமாக இருந்த கோவை முருகானந்தம்….தனது கண்டுபிடிப்புக்கு ‘உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது’  என்று மகிழ்ச்சி பொங்க கூறி உள்ளார்.

2019 ஆண்டுக்கானஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்த  விருது பட்டியலில் கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மூல காரணமாக இருந்த  பீரியட். எண்ட் ஆஃப் செ;ன்டன்ஸ் (Period. End Of Sentence) என்ற படத்துக்கு சிறந்த குறு ஆவணப் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

உலகமே எதிர்பார்க்கும் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி  தியேட்டரில் விழா நடைபெற்று வருகிறது. இதில்,  தமிழகத்தில் கோவை அருகே உள்ள கிராமப்பகுதியை  அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கண்டுபிடிப்பு குறித்த திரைப்படம், சிறந்த குறு ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.

கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கிராமப்பகுதிகளில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளை தவிர்க்கும் விதத்தில் குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கினை தயாரித்து சாதனை படைத்தவர்.

வணிகமுறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் விலை அதிகமான நாப்கின்களை விட, மிக குறைந்த விலையில்  தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற் கான காப்புரிமை பெற்றவர்.  அதற்காக மேக் இந்தியா திட்டத்தின் வாயிலாக அவருக்கு  இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் குறைந்த விலையிலான நாப்கின் தயாரிக் கும் கருவியை,  கண்டுபிடித்து, அதை கிராமப்புற மக்களிடையே கொண்டு சென்று பிரபலப்படுத்திய  கோவை முருகானந்தத்தின் நாப்கின் தயாரிப்பு மற்றும்  பெண்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சி குறித்து தயாரிக்கப்பட்டிருந்த  Period: End of Sentence என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் பரிசை தட்டிச்சென்றுள்ளது.

படத்தில், பெண்கள் மாதவிடாய் காலங்களில் படும் அவதி, குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் நிலைமை மற்றும்,  நாப்கின் தயாரிப்பது குறித்தும், அந்த இயந்திர பயன்பாடு மற்றும் அதை சந்தைப்படுத்துத்தல், மற்றும் அந்த நாப்கின் வாயிலாக கிராமப் பெண்கள் சுகாதார வசதியுடன்  வாழ்க்கை தரம் உயர்வது குறித்து படம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர்  விருது கிடைத்துள்ளத  குறித்து கருத்துதெ ரிவித்த கோவை தொழிலதிபர் அருணாச்ச லம் முருகானந்தம், விருது கிடைத்தற்கு ரொம்ப மகிழ்ச்சி என்றவர், இந்த பிரச்சினை உலக அங்கீகாரம் பெற்றுள்ளது என்று கூறினார்..

தற்போது, கிரராமப்புற பெண்களின் மாத விடாய் காலங்களில் படும் அவதி குறித்து, உலகமே திரும்பி பார்க்கும் என்றும் என்றவர், இனிமேல், பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருப்பது குறித்து மேலும்  பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.