நேற்றே துருக்கியில்  ராணுவப்புரட்சி முறியடிப்பு எனச் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
துருக்கி அரசு தனது கைதுப் படலத்தைத் தொடர்கின்றது.
அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றதாகச் சந்தேகப்படும் ராணுவ வீரர்கள், நீதிபதிகளைத் தண்டித்து வருகின்றது.
நீதிபதிகளுக்கு தொடர்பு:
ஜனாதிபதி மாளிகையின் அறிக்கையின்படி 161 பொதுமக்கள், 104 ராணுவவீரர்கள் உட்பட 265 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவப் புரட்சியின் திட்டத்தில் பங்குள்ளதாக இரண்டு உயர்மட்ட ராணுவ அதிகார்கள் உட்பட 2,839 வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர், 2,745  நீதிபதிகள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
turkey1
ஃபெதுல்லா குலென் பொறுப்பு ?
துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம் இந்த அரசைக் கவிழ்க்க நடந்த முயற்சி துருக்கி ஜனநாயகத்தில் ஒரு கருப்பு கறை படிந்த நாள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் ராணுவப்புரட்சி நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஜனாதிபதி இந்தத் தாக்குதலுக்கு முஸ்லிம் தலைவரான ஃபெதுல்லா குலென் தான் காரணம் எனவே அமெரிக்கா அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள குலென், “தமக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லையெனத் தெரிவித்துள்ளார். துருக்கியில் ந்டந்த அரசுக் கவிழ்ப்பு முயற்சியை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவப் புரட்சி ஏன் நடந்தது ?
துருக்கி ஜனாதிபதி யின் “துருக்கியை முன்னேற்றும் திட்டத்தின்” மீதான விமர்சனங்கள் துருக்கி மக்களை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிளவுப் படுத்தி உள்ளது. சிரியாவில் நடைபெறும் போரை அடுத்து தொற்று நோயாய் பரவி வரும் வன்முறையும் இந்த ராணுவப்புரட்சி முயற்சிக்கு காரணம்.
ஜனாதிபதி எர்டொகன் மற்றும் அவரது ஏ.கே. கட்சி எளிதாய் தேர்தலில் வெற்றி பெறும் முறையைக் தெரிந்து வைத்துள்ளனர். எனினும் “ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதாய் அவர்கள் அளித்து வரும் நீண்ட நாள் வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா எனும் சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
எர்டோகன் இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டை பின்பற்றுபவர்.
அவர் மதச்சார்பற்றக் கொள்கைகளை நிராகரித்து வருகின்றார். தன்னை மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும் சர்வவல்லமை கொண்டவராகவும் நிலைநிறுத்துவதில் மட்டுமே குறியாய் இருக்கின்றார்.
சிரியாவில் வன்முறையைத் துருக்கி ஆதரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிக் ஸ்டேட் என அழைத்துக் கொள்ளும் சிரிய பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களுக்குத் துருக்கியையே இலக்காக்கின்றனர்.
நமது பத்திரிக்கை.காமில் வெளிவந்த சில செய்திகள்:

  1. துருக்கியில் 20 பேர் பலி :மனித வெடிகுண்டுத் தாக்குதல்
  2. துருக்கியில் 36 பேர் பலி, 147 பேர் படுகாயம்
  3. தீவிரவாதத்தை விதைத்த துருக்கி , வினையை அறுவடை செய்கின்றது

 
அதன் பரிமாண வளர்ச்சியே  ஜனாதிபதி எர்டுகனை வீழ்த்தும் இந்த ராணுவப் புரட்சி  முயற்சி.
நடந்தது என்ன ?
வெள்ளிகிழமை மாலை ராணுவ பீரங்கிகள் இஸ்தான்புல்லில் உள்ள இரண்டு முக்கிய பாலங்களின் மீது நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது, சில ராணுவ விமானங்களும் மிகத் தாழ்வாகப் பறந்தன.
turkey2
அப்போது ராணுவத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவு துருக்கி அரசை ஒரு “அமைதிக் கவுன்சில் ” வழிநடத்துவதாக அறிவித்தது. அப்போது ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்த பிரதமர், பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். அதில், ” மக்கள் தெருவுக்கு வந்து போராடி, கலவரக்கார ராணுவ வீரர்களை ஒடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  அவரது வேண்டுகோளை ஏற்று மக்கள் போராடிய செய்தியை நேற்றே வெளியிட்டு இருந்தோம். இஸ்தான்புல் திரும்பிய அவர், நடக்க  முயன்ற ராணுவப் புரட்சி ஒரு ராஜ துரோக நடவடிக்கை ஆகும். எனவே, இதில் சம்பந்தப் பட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இந்தக் கலவரத்தில், அங்காராவில் உள்ள ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்ற வளாகம் தாக்கப்பட்டது.
சி.என்.என். தொலைக்காட்சி சேவை தற்காலிக  முடக்கம் :
சி.என்.என். துருக்கி தொலைக்காட்சி அலுவலகம் தற்காலிகமாக, கலவரக் காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் சிலர் நேரத்திற்குள் போலிசார் கலவரக்காரர்களைக் கைது செய்தனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட டக்சிம் ஸ்கொயர் :
டக்சிம் ஸ்கொயர் எனும் இடத்தில் அதிகப்பட்சமாக கலவரமும், துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்காரா பகுதியில் ஒரு ஹெலிக்காப்டர் சுட்டு வீழ்த்தப் பட்டது.
tiurkey4
கிரீஸ் நாட்டில் தஞ்சம்:
துருக்கியிலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் தப்பிய எட்டு பேர் அரசியல் அடைக்கலம் கோரி கிரீஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளனர் எனக் கிரீஸ் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அவர்களைத் திருப்பியனுப்ப வேண்டும் எனத் துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
turkey 3
அமெரிக்க ராணுவத் தளத்திற்கு  சீல் :
அமெரிக்காவால் சிரியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டுவரும் துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானத்தளத்தை துருக்கி அதிகாரிகள் சீலிட்டு உள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா அறிக்கை:
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ” இதுவரை அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை….. இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது…. உயிரிழந்தவர்களுக்காக வருத்தப்படுகின்றேன்…..  மேலும் வன்முறை வெடிக்காமல் தடுக்க துருக்கி அரசு சட்டத்திற்குட்பட்டு  நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.. தீவிரவாதத்திற்கு  எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் படும் எனத் தெரிவித்துள்ளார்.