புதுதில்லி: 
துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது.

துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது  துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது.
மேலும் அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும்  மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு மத குரு ஃபெத்துல்லா குலனே காரணம் என  அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார்.   புரட்சியில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார். இதற்கிடையலி  துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக தொலைக்காட்சியில் அந்நாட்டு ராணுவம் அறிவித்தது உள்ளது. துருக்கியில் ராணுவத்தின் இந்த  நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்நாட்டு பிரதமர் பின்னாலி எல்டரீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
800x480_IMAGE55578250
துருக்கியில் ராணுவ புரட்சி காரணமாக  இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  அங்குள்ள இந்தியர்கள் தெரிவித்தனர். மேலும்  விளையாட்டு போட்டியில் பங்கேற்க துருக்கி சென்றவர்கள் அங்குள்ள டிராப்சோனில் உள்ள  உள்ள விளையாட்டு கிராமத்தில் பத்திரமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிக்காக  20 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் துருக்கி சென்றுள்ளனர்.‘
துருக்கியில் வசிக்கும்  இந்தியர்கள்  தொடர்புகொள்ளும் வகையில் ஆங்காரா +905303142203; இஸ்தான்புல் – +905305671095 , என்ற எமர்ஜென்சி போன் நம்பரை மத்திய அரசு அறிவித்து உள்ளது.