கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

Must read

அல்மாட்டி:
ஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர்.

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் காவல் நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம் மீது சரமாரியாக துப்பபாக்கியால் சுட்டனர்.
காவல் நிலையத்தின் உள்ளே சென்று  போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.
போலீசார்  காரை விரட்டியபோது நடந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.  அதன்பின் காரை மடக்கி பிடித்து ஒருவனை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பழைய குற்றவாளி என தெரியவந்தது. இதனால் நகர் முழுவதும்  பதட்டம் ஏற்பட்டது.

More articles

Latest article