சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார்.

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை செஸ் போட்டியில், இந்தியா சார்பில் பல வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் கலந்துகொண்டார். இந்த போட்டியில், ஏற்கனவே 5முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதினார். ஆனால், எதிர்பாராத வகையில், டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.. இதனால் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம் கிடைத்தது. அதற்கான  வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

தற்போது, 18 வயதாகும் பிரக்ஞானந்தா உலககோப்பை செஸ் போட்டியில் 2வது இடம் பிடித்ததற்கு, இந்திய  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். அத்துடன், பிரக்ஞானந்தா, தமிழ்நாடு வரும்போது,  தமிழக விளையாட்டுத்துறை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று முற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு, தமிழ்நாடு  விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்களும் வரவேற்க திருண்டு இருந்தனர்.

விமான நிலையத்தில், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. . அதன் தொடர்சியாக அவரை திறந்தவெளி வாகனம் மூலமாக அழைத்து செல்லப்பட்டார்.நேரடியாக நேருவிளையாட்டு அரங்கிற்கு அழைத்துச்சென்று அவருக்கு தேர்நீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா,  உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தகுதி பெற்றுள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது. . தங்கம் வெல்ல முடிய வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதே முக்கியம். அடுத்தடுத்து ஏராளமான செஸ் தொடர்கள் வருகின்றன; வழக்கம்போல் பயிற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நிறைய இளம் செஸ் வீரர்கள் வருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.