உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

ஆரம்பம் முதல் திணறிய இந்தியா 10.2 ஓவரில் 84 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

நான்காவது விக்கெட்டுக்கு கோலி-யுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொண்டனர்.

இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது.

241 ரன் எடுத்தால் உலகக்கோப்பை என்ற கனவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் கனவை தகர்க்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

இந்திய மண்ணில் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் உலக கோப்பையை வெல்ல தேவையான வியூகங்களை இந்திய அணி மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சூ..மந்திரகாளி போட்டு அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இந்தியாவை சமாளிக்குமா?