ண்டன்

லகக் கோப்பைகிரிக்கெட் போட்டி அணிகளின் தலைவர்கள் இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இன்று முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூலை மாதம் 14 வரை நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை போட்டி இடுகின்றன. இவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன.

இந்த போட்டியை ஒட்டி உலக நாடுகள் பலவற்றின் அணி வீரர்களும் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். இங்கிலாந்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த அணி தலைவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் அனைத்து அணித் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அரசி எலிசபெத் ஒவ்வொரு அணித் தலைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன் எலிசபெத் அரசியின் பேரனும் இளவரசருமான ஹாரியும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.